Saturday, January 12, 2013

வறுமை படைத்த பெருமை


வறுமை படைத்த பெருமை
அப்போது இந்தியாவில் இப்போது பாகிஸ்தானில் இருக்கும் பான் கிராமத்தில் கடுமையான ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் ஓபராய். ஆறு மாதத்தில் தந்தையை இழந்தார். கல்வி கற்க வசதி இல்லை. இளம் வயதில் திருமணம்.
சிம்லாவில் ஓர் ஓட்டலில் வேலை. மாதச் சம்பளம் 40 ரூபாய்.சம்பளம் உயர்ந்து நூறாகியது. ஓட்டல் அனுபவம் கூடியது. கான்ட்ராக்ட் அடிப்படையில் ஓர் ஓட்டலை ஆரம்பித்தார். தன்னிடமிருந்த அத்தனையையும் விற்று ஒரு நொடிந்த ஓட்டலை வாங்கினார். தொடர்ந்து அடுத்தடுத்து ஓட்டல்கள். உலகில் இன்று எல்லாப் பகுதிலும் ஓபராய் ஓட்டல்கள்.கோடீஸ்வரர் என்று சாதனை படைத்தார்.
வறுமையும் பசியும் சிலரைச் சிந்திக்கத் துண்டியுள்ளது. வறுமையும் பசியும் தொடர்வது அறியாமையாலும், முயலாமையாலும் என்று தெரிந்து கொண்டவர்கள் கடுமையான உழைப்பின் மூலம் சுகமான வாழ்வை அடைந்துள்ளார்கள்.
ஒரு சாதனை எத்தனைக்கு எத்தனை பிரமிக்கத் தக்கதாக உள்ளதோ. அத்தனை கடினமானது.

Sunday, January 6, 2013

எனக்குக் கடவுள் மீது அபார நம்பிக்கை உண்டு, ஆனால் அதற்காக நான் சம்மட்டிக்கு இதுவரை ஒய்வு கொடுத்ததே இல்லை.
பெஞ்சமின் பிராங்க்ளின் 
முயற்சியை இடையில் கைவிடுபவர்கள் வெற்றி பெறுவதில்லை. வெற்றி பெறுபவர்கள் எந்த சுழலிலும் முயற்சியை விட்டு விடுவதில்லை.

Tuesday, January 1, 2013

திறமைக்கு மதிப்புண்டு

"அவரிடம் சொன்னால் போதும் முடித்துவிடுவர்" என்று மற்றவர்கள் பேசும்படி செயல்திறன் வளர்த்துக்  கொள்ளுங்கள்...
பழங்கள் நிறைந்த மரம் எப்போதும் தாழ்ந்து வளையும். நீ பெருமை அடைய வேண்டுமானால் அடக்கத்தோடு இரு.

Saturday, December 22, 2012

நேர்மையில்லாத காவல்

சீனப் பெருஞ்சுவரைச் சந்திரனிலிருந்து பார்த்தாலும் பூமியில் தெரியும் மிகப் பெரிய அதிசயம் என்பார்கள். எட்டு மீட்டர் உயரமும் நான்கு முதல் ஐந்து மீட்டர் அகலம் கொண்ட இப்பெருஞ்சுவரைச் சீன மக்கள் எதிரிகளிடம் தங்களைப் பாதுகாப்பதற்காகக் கட்டி முடித்தார்கள். பல ஆண்டுகள், பலருடைய உழைப்பில் உருவானது இந்த பெருஞ்சுவர். இந்தப் சீனப் பெருஞ்சுவரைக் கட்டி முடித்ததும் மக்கள் அளவில்லாத மகிழச்சி கொண்டார்கள். இனி எதிரிகள் தங்கள் நாட்டுக்கு வர முடியாது என்று கருதினார்கள். ஆனால் சில நாட்களிலேயே எதிரிகள் நாட்டில் ஊடுருவி விட்டார்கள். காரணம், வாயிற்காவலில் நின்ற சீன நாட்டுக் காவலர்களுக்கு லஞ்சம் கொடுத்து இவர்கள் ஊடுருவி விட்டார்கள்.

நேர்மையில்லாதவர்கள் எல்லா இடங்களிலும் விரவியுள்ளதால் தான் இன்று உலகில் வன்முறையும் அதன் விளைவான அச்சமும் தலைவிரித்தாடுக்கிறது தன் நலனுக்காகத் தேசத்தைக் காட்டிக் கொடுபவர்கள் மன்னிக்க இயலாத குற்றவாளிகள். ஆனால் இவர்களையும் மனம் மாற்றிட வேண்டியது நல்ல அரசின் பொறுப்பு.

சுயநலம்,பேராசை, கோழைத்தனம் முதலானவைகள் தான் நம் சுதந்திரத்தை இழக்கச் செய்யும் ஜென்ம எதிரிகள்.
                                                            ஷேக்ஸ்பியர்.   
   <�� n<�ҩ @k� e='mso-spacerun:yes'>                                   ஷேக்ஸ்பியர்.   

Friday, December 21, 2012

போர்டு(ford) போட்ட போடு



மோட்டார் கார் உற்பத்தியில் புகழ்பெற்ற தொழில் அதிபர் போர்டு (ford) இங்கிலாந்து சென்றிருந்த சமயம் தனது தொழிற்சாலையில் தயாராகும் போர்டு கார்களைப் பயன்படுத்தாமல் ரோல்ஸ்ராய் காரரைப் பயன்படுதிக்கொண்டிருந்தார். புகழ்பெற்ற தனது கம்பெனி காரை விடுத்து வேறொரு நிறுவனத்தின் காரைப் பயன்படுத்தும் இவரை ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள் மக்கள். அச்சமயம் இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜ் கொடுத்த விருந்தில் கலந்துகொள்ளச் சென்ற போர்டை நோக்கி இங்கிலாந்து அரசர் “தாங்கள் வேறொரு நிறுவனத்தின் காரைப் பயன்படுத்துவதன் நோக்கம் என்ன?” என்றார் அதற்கு. போர்டு “உலகெங்கிலுமுள்ள மக்கள் எங்கள் தொழிற்சாலையின் கார்களைத்தான் விரும்பி வாங்குகிறார்கள் எனவே எங்கள் தொழிற்சாலையில் காரை முன்பதிவு செய்தவர்களுக்கு விற்று விடுகிறார்கள். எங்கள் நிறுவனத் தொழிலாளர்களுக்கு முதலாளியின் தேவையைவிட வடிகையாளர்களின் தேவையே முக்கியம்” எனக் கூறினார் போர்டு நிறுவனத்தின் வெற்றியின் இரகசியம் புரிந்தது.

வித்தியாசமாகச் சிந்திப்பவர்களும், விசித்திரமாகச் செயல்படுபவர்களும், சாதுர்யாமாகப் பேசுபவர்களும் பல சாதனைகளைச் செய்துள்ளது வரலாறு.

எப்படிப்பட்ட மனிதரிடமிருந்தும் நாம் ஒரு பாடம் கற்றுக்கொல்லாம்,கூர்ந்து கவனித்தால்!